tamilnadu

img

பிற்படுத்தப்பட்ட சமூக மணமகன் மீது தாக்குதல்.. குதிரையில் ஊர்வலம் சென்றதால் உயர் சாதியினர் வெறியாட்டம்

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலம் அகர்மால்வா மாவட்டத்தில் உள்ள பத்வாடா கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திர பார்மர். எம்.காம். மற்றும் பி.எட்.படித்துள்ள இவர், அங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்நிலையில், தர்மேந்திர பார்மர் திருமணநிகழ்ச்சியின் ஒருபகுதியாக, கடந்த சனிக்கிழமை இரவு ஊர்வலம் நடைப்பெற்றுள்ளது. மணமகன் தர்மேந்திர பார்மரை, அவரது உறவினர்கள்குதிரையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ரஜபுத்திர வம்சத்தை சேர்ந்த உயர்சாதியினர், பர்மரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லஎதிர்ப்பு தெரிவித்து, தகராறு செய்ததுடன், திடீரென தர்மேந்திர பார்மரை குதிரையில் இருந்துகீழே தள்ளி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற பார்மரின் தந்தையையும் தாக்கியுள்ளனர்.தகவல் அறிந்து, போலீசார் சம்பவ இடத்துக்குசென்றபோது அவர்கள் மீதும் கற்களைத் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசாரின் துப்பாக்கிகளையும் பறிக்கும் முயற்சியும் அரங்கேறியுள்ளது.

;